தனுசுடன் காதலா? : சிரிப்புதான் வருகிறது என்கிறார் மிருணாள் தாக்கூர் | பிளாஷ்பேக்: சபதத்தை நிறைவேற்றிய ராமராஜன் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் படத்தில் நடித்த நம்பியார் | 'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு |
பாலிவுட்டில் வெளியாக இருக்கும் 'சன் ஆப் சர்தார் 2' படத்தின் நிகழ்ச்சியில் தனுசுடன் பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரும் கலந்து கொண்டார். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்தே சென்றார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலானது.
இதனால் தனுஷ், மிருணாள் தாக்கூர் இருவரும் தீவிரமாக காதலிப்பதாக தகவல் வெளியானது. வட இந்திய மீடியாக்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டது. ஆனால் இதனை மிருணாள் தாக்கூர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நானும், தனுஷும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் வேறெந்த தொடர்பும் இல்லை. 'சன் ஆப் சர்தார் 2' படத்தின் நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்றதை தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நிகழ்ச்சிக்கு தனுஷை அஜய் தேவ்கன் பேசி அழைத்து வந்தார். அதில் நாங்கள் இணைந்து பங்கேற்றதுதான் மற்றவர்கள் இப்படி பேசுவதற்கு காரணம். தனுஷையும், என்னையும் இணைத்து பரவி வரும் காதல் வதந்தியை பார்க்கும்போது சிரிப்பு, வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.