மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் | 'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் |

பழம்பெரும் நடிகை மற்றும் பாடகி கே.பி.சுந்தராம்பாள், அவ்வையாராக நடித்து பெரும்புகழ் பெற்றார். தனது கணீர் குரலால் இசைத் துறையிலும் ஆதிக்கம் செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி, கே.பி.சுந்தராம்பாள் பிறந்த ஊர். 1968ம் ஆண்டு கொடுமுடியில் தனது பெயரில் கே.பி.எஸ். என்ற திரையரங்கை கட்டினார். இந்த தியேட்டரின் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தினார் கே.பி.எஸ்.
1969ம் ஆண்டு அக்டோபர் 28ந் தேதி இதன் திறப்பு விழா நடந்தது. இதனை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும், எம்ஜிஆரும் திறந்து வைத்தனர். ஜெயலலிதா குத்துவிளக்கேற்றி வைத்தார். முன்னதாக கே.பி.சுந்தராம்பாள் வீட்டில் நடந்த விருந்தில் அனைவரும் கலந்து கொண்டனர். தனது வீட்டில் இருந்து தியேட்டருக்கு மூவரையும் திறந்த ஜீப்பில் அழைத்துச் சென்றார் கே.பி.சுந்தராம்பாள்.
2020-ம் ஆண்டு இந்த தியேட்டர் கொரோனாவால் மூடப்பட்டது. 51 ஆண்டுகள் திரைப்படங்கள் திரையிடப்பட்டு பொன்விழா கண்ட கே.பி.எஸ் திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வருகிறது.