ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா |
சின்னத்திரை நடிகை பிரியா பிரின்ஸ் அண்மையில் தான் பல லட்சங்களை செலவு செய்து பார் செட்டப்புடன் புதிய வீட்டை கட்டினார். கிரகப்பிரவேசம் முடிந்த கையோடு வீட்டை ஹோம் டூர் வீடியோ எடுத்து தனது யூ-டியூப் நேயர்களுக்கும் சுற்றிக்காட்டினார். ஆனால், தற்போது அந்த வீட்டின் ஒரு பகுதியை தவறாக கட்டிவிட்டதாக கூறி மீண்டும் இடித்து கட்டியுள்ளார். அதாவது வீட்டின் சமையலறை ஓப்பனாக இருக்க வேண்டும் என்பது பிரியாவினுடைய தாயாரின் ஆசையாம். முதலில் கட்டும் போது அப்படி கட்டாமல் வேறுவிதமாக கட்டிவிட்டதால் வீட்டின் கிச்சனை மட்டும் இடித்து பல லட்சங்கள் செலவு செய்து மீண்டும் கட்டியுள்ளார். பணத்தை தண்ணியாக செலவழித்து வீட்டை தனது ரசனைகேற்ப வடிவமைத்துள்ள பிரியா பிரின்ஸ், பர்னிச்சர்களை கூட கஸ்டமைஸ் ஆப்ஷனுடன் செய்து தான் வாங்கியிருக்கிறாராம்.