Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன் | உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | கணவன், மனைவி மோதிக் கொள்ளும் பிப்ரவரி 27 வெளியீடுகள் | 47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த் | தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : திருடனாக நடித்த ஜெமினி கணேசன்

23 பிப், 2026 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Flashback-Gemini-Ganesan-plays-a-thief
Advertisement

பொதுவாக ஜெமினி கணேசன் மென்மையான கேரக்டர்களிலேயே நடிப்பார். அவர் வில்லனாகவோ அல்லது நெகட்டிவ் கேரக்டரில் நடித்தது மிகவும் குறைவு. அந்தப் படங்களில் முக்கியமானது 'அதிசய திருடன்'. இதில் ஜெமினியுடன், சாவித்திரி, டி.எஸ்.பாலையா, கே.ஏ.தங்கவேலு, டி.பி.முத்துலட்சுமி, பேபி ராஜகுமாரி, கே.நடராஜன், வி.என்.ஏழுமலை ஆகியோர் நடித்திருந்தனர். பிரபலமான தெலுங்கு தயாரிப்பாளர்கள் டி.பி.நாராயணா மற்றும் எஸ்.பவாநாராயணா ஆகியோரால் இந்த படம் தயாரிக்கப்பட்டது. பி.புல்லையா இயக்கினார் .

கதை ஒரு தந்திரமான திருடனைப் பற்றியது (ஜெமினி கணேசன்). அமைச்சர் நீலகண்டம் (டி.எஸ். பாலையா) மாநிலத்தின் நிதியைக் கொள்ளையடிக்கிறார். அந்த அமைச்சரிடம் உள்ள மூன்று முக்கியமான வைரங்களைத் திருட திட்டமிடுகிறார் ஜெமினி கணேசன். அவரது காதலியான சாவித்திரி அவரை திருத்த முயற்சிக்கிறார். அவரும் திருந்தி விடுகிறார். ஆனால் மீண்டும் திருட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.

தஞ்சை ராமையா தாஸ் திரைக்கதை, வசனம் எழுதிய இந்த படத்திற்கு பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் சுசர்லா தட்சிணாமூர்த்தி இசை அமைத்துள்ளார். அன்னையா ஒளிப்பதிவு செய்துள்ளார், வாஹினி ஸ்டுடியோவில் படமாக்கப்பட்டது. டிஎம் சவுந்தரராஜன் பாடிய முருக பக்தி பாடலான 'முருகா என்றதும் உருகாத மனம்' என்ற பாடல் மிகவும் பிரபலமானது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
உதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாஉதய்ப்பூர் சென்றடைந்த திருமண ஜோடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap