ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

எண்பதுகளின் இறுதியில் தொடர்ந்து வெள்ளி விழா படங்களாக கொடுத்து வந்த நடிகர் ராமராஜன் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ள படம் 'சாமானியன்'. அவரது 45வது படமாக உருவாகியுள்ள இந்தப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஆர்.ராகேஷ் இயக்கியுள்ள இந்தப்படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ராமராஜன், தொடர்ந்து கதாநாயகனாகவே நடிக்க முடிவு செய்தது ஏன் என்கிற கேள்விக்கு பதில் அளித்து பேசும்போது, “சினிமாவை விட்டு இத்தனை வருடங்களாக ஒதுங்கவில்லை. நல்ல கதைக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். இத்தனை வருடங்களில் ராமராஜன் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பார் என பத்திரிகைகள் எழுதி எழுதி கடைசியில் எனக்கு ஹீரோ வாய்ப்பே தேடி வந்தது.
முன்பு எம்ஜிஆர், சிவாஜி கணேசன் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் பாணியில் சிவாஜியையும் சிவாஜி பாணி படத்தில் எம்.ஜி.ஆரையும் நடிக்க வைக்க ஆலோசனை கூறினார்கள். ஆனால் அப்படி எம்ஜிஆர் நடித்த பாசம், சிவாஜி நடித்த தங்கச் சுரங்கம் என இரண்டு படங்களுமே வரவேற்பு பெறவில்லை. அதன் பின்னர் அவரவருக்கு ஏற்ற கதையிலேயே நடியுங்கள் என்று கூறி விட்டார்கள். அப்படி எனக்கு எந்த கதை சரியாக இருக்கும் என மக்கள் ஒத்துக் கொள்கிறார்களோ அதே வழியில் தான் நான் ஆரம்பத்தில் இருந்து பயணித்து வந்திருக்கிறேன்” என்றார்.




