‛அயோத்தி' படத்தினால் நடந்த நன்மை! - சசிகுமார் ஓபன் டாக் | இயக்குனர் இளன் அடுத்த படத்தின் அப்டேட்! | இன்று வரை ஓடிடி.,க்கு தராத சிலம்பரசன் படம் | அமேசான் நிறுவனம் கைப்பற்றிய கேங்கர்ஸ் | விருதுகளை விட ரசிகர்களின் அன்புதான் முக்கியம் : சாய் பல்லவி | இனி இப்படி பேசமாட்டேன் ; கடும் எதிர்ப்புக்கு அடிபணிந்த மகாராஜா வில்லன் | மோகன்லால் பட ரீமேக்கில் கண் பார்வையற்றவராக நடிக்கும் சைப் அலிகான் | நடிகையிடம் மன்னிப்பு கேட்ட போதை வில்லன் நடிகர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தில் 20 ஆக்ஷன் காட்சிகள் | எனக்கு ஒளியும் சக்தியுமாய் இருப்பது நீங்கள்தான் அப்பா : ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பதிவு |
தமிழ் சினிமாவில் 90களில் நிறைய சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தேவா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
இளையராஜா கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அறிமுகமாகி நிறைய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெறுவது அவ்வளவு சுலபமில்லை. அப்படி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றவர் தேவா.
சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தேவா தனக்கு 'தேவா' என்ற பெயரை வைத்தது நடிகர் ராமராஜன் எனக் குறிப்பிட்டார்.
“நான் 'தேவா பிரதர்ஸ்' அப்படிங்கற பேர்ல 'அத்தான்' அப்படின்னு ஒரு படம் பண்ணேன். அது ரிலீஸ் ஆகலை. ஒரே ஒரு பாட்டு எடுத்தாங்க. அப்புறம் ஊருக்குப் போயிட்டாங்க.
அஞ்சி படம், பத்து படம் ஆன பிறகு பேரு சரிய செட் ஆகலன்னு ஒரு ஜோசியர் சொன்னாரு. அப்ப நீங்க 'மனோரஞ்சன்' என பேரு வச்சா சினிமாவுக்கு நல்லா வருவீங்கன்னு சொன்னாரு. அந்தப் பேரு வச்சி வட சென்னைல முதன் முதலா ஒரு கச்சேரி செஞ்சேன். மனோரஞ்சன் இசை நிகழ்ச்சின்னு பெரிய போஸ்டர்லாம் போட்டு கச்சேரி நடந்துட்டிருக்கும் போது என் கூட இருந்த பார்ட்னர் ஒருத்தர் ஹிந்தி பாட்டு ஒண்ணு பாடினாரு. 'பாபி' படத்துல 'பேஷாக்கு மந்திர்' னு ஒரு பாட்டு பாடினாரு. அங்க நிறைய சேட்டுங்க இருந்தாங்க. எங்களுக்குத் தெரியாது, தப்புத்தப்பா ஹிந்தில பாடிட்டாருன்னு நினைக்கிறேன். அவ்வளவுதான், அந்த மனோரஞ்சன் அதோட முடிஞ்சிட்டாரு.
அப்புறம் இன்னொரு ஜோசியர்கிட்ட போனேன். மனோரஞ்சன் உங்களுக்கு செட்டாகாது. 'நாடோடி சித்தன்'னு பேர் வைங்கன்னாரு. அந்த பேர்ல பார்டர் தோட்டத்துல ஒரு கச்சேரி பண்ணேன். அங்க என் பிரண்டு ஒருத்தர் அதே பாபி படத்தோட பாட்டைத் தப்பா பாடினாரு. அங்கயும் கட்டைய தூக்கிக் காட்டிட்டாங்க. 'நாடோடி சித்தன்' அங்கேயே முடிஞ்சிட்டாரு.
இப்படி மாத்தி மாத்தி பேரு வச்சிட்டு வந்தேன், எதுவும் செட்டாகல. அப்புறம் தீனதயாள் இயக்கத்துல ராமராஜன் நடிக்கிற 'மனசுக்கேத்த மகராசா' படத்துக்கு வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு 'C தேவா'ன்னு பேர் வச்சேன். அப்பா பேரு சொக்கலிங்கம், என் பேரு தேவநேசன் அதனால தேவா. ஆனா, ராமராஜன் சார் 'சி'ங்கறது இறங்கிற மாதிரி இருக்கு. தேவா-ன்னு போட்டால் நல்லா வருவீங்கன்னு ராமராஜன் சார் பேர் வச்சாரு,” என தன் பெயர்க்காரணத்தைப் பகிர்ந்தார்.