சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
அஞ்சலி நடித்து முடித்துள்ள தெலுங்கு படம் 'கேங்ஸ் ஆப் கோதாவரி'. இதில் அவர் விஷ்வக் சென் ஜோடியாக நடித்துள்ளார். அவருடன் நேகா ஷெட்டி, நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். கிருஷ்ண சைதன்யா இயக்கி உள்ளார். இந்த படம் வருகிற 31ம் தேதி வெளிவருகிறது. அஞ்சலி தற்போது இந்த படத்தின் புரமோசன்களில் கலந்து கொண்டு வருகிறார். ஐதராபாத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அஞ்சலி அதில் பேசியதாவது:
கஷ்டப்பட்டு நடித்த படம் ரிலீசாகும்போது, அதற்கான சந்தோஷம் தனி அலாதியானது. அதுவே அந்த படம் வெற்றி பெற்றால், சந்தோஷம் பல மடங்கு அதிகரித்துவிடும். தோல்வி அடைந்தால் சில நாட்கள் கஷ்டமாகவே இருக்கும். 'கேங்ஸ் ஆப் கோதாவரி'க்கு பிறகு ஷங்கர் சார் இயக்கத்தில் ராம் சரணுடன் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' வெளியாகும். தமிழில் ராம் இயக்கத்தில் நிவின் பாலியுடன் நடித்திருக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' படம் ஜூலையில் திரைக்கு வரும். தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்தாலும் சினிமாவை மொழியால் பிரித்து பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது. எல்லாமே சினிமாதான். எல்லாமே நடிப்புதான். அப்படித்தான் ஒவ்வொரு கேரக்டரையும் நான் பார்க்கிறேன். அதில் ஈடுபாடும் காட்டுகிறேன். ஒரேவித உழைப்பையும் தருகிறேன். என்றார்.
திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அஞ்சலி “சமூக வலைத்தளத்தில் எனக்கு மூன்று, நான்கு திருமணங்கள் செய்து வைத்துவிட்டார்கள். முதலில் இதுபோன்ற திருமண வதந்திகள் வந்தபோது வீட்டில் அனைவரும் கவலைப்பட்டனர். சில நாட்கள் வரை அது பெரும் பரபரப்பாக இருக்கும். இப்போது யாரும் கண்டு கொள்வதே இல்லை. என் திருமணத்தை பற்றி வந்த வதந்திகள் காரணமாக நான் ஒரு காதலனை அழைத்துச்சென்று இவனைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப்போகிறேன் என்று சொன்னால் கூட வீட்டில் யாரும் நம்ப மாட்டார்கள்.
நான் நிச்சயமாக திருமணம் செய்து கொள்வேன். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. இப்போது நான் சினிமாவில் பிசியாக இருக்கிறேன். நான் திருமணம் செய்த பிறகும் சினிமாவில் நடிப்பேன். 50 படங்களை தாண்டி வந்திருக்கிறேன். இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது'' என்றார்.