தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை | சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படப்பிடிப்பு நாளை துவக்கம் | பிளாஷ்பேக்: ஊதியத்தை உயர்த்திக் கேட்டு, உற்சாகமிகு நகைச்சுவையை வழங்கிய டி ஆர் ராமச்சந்திரனின் “சபாபதி” | அட்லி - பிரியா தம்பதியின் மகளுக்கு 'மியூ' பெயர் சூட்டல் | 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை மிஸ் செய்தது ஏன்? ஜெய் விளக்கம் | அடுத்த ஜேம்ஸ்பாண்ட் யார்? | அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஏன் அந்த இலாகா? நடிகர் விஷால் கேள்வி | பஹத் பாசில் - பிரேம்குமார் இணையும் புதிய படம் துவக்கம் | விஜய்க்கு அவகாசம் தரணும்... ரஜினியுடன் போட்டிதான், பொறாமை இல்லை: கமல் பேட்டி | கருப்பு : இரண்டே நாளில் 50 கோடி வசூல் ? |

நடிகை குஷ்புவின் கணவரான, இயக்குனர் சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே அப்படத்திலிருந்து தான் விலகுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சுந்தர்.சி. அதையடுத்து அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே குஷ்புவின் சோசியல் மீடியாவில் சிலர் மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒருவர் சுந்தர். சியின் பரிதாபகரமான கதை விவரிப்பு காரணமாக ரஜினியும், கமலும் உங்கள் கணவரை தாங்கள் தயாரிக்கும் படத்திலிருந்து வெளியேற்றி விட்டதாக கேள்விப்பட்டோம். அப்படியானால் இந்திய திரையுலகம் உங்கள் கணவர் சுந்தர்.சியை குப்பை தொட்டியில் போட வேண்டிய நேரமா? என்பது உள்ளிட்ட பலதரப்பட்ட கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான குஷ்பூ, தனது எக்ஸ் பக்கத்தில், என் செருப்பு சைஸ் 41. அடி வாங்க தயாரா? என்று ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.