‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு |
ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த குஷ்பு, தமிழில் 'வருஷம் 16' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக கலக்கிய குஷ்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல சிறிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய குஷ்பு, தற்போது சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் குஷ்பு காலடி எடுத்து வைத்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
7 வயதில் குழந்தையாக நடிக்க தொடங்கிய நான், இன்று 45 ஆண்டுகளை கடந்துள்ளேன். உற்சாகமான இந்த பயணத்தில் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருமே சிறப்பானவர்கள்.
ஒரு நடிகை என்பதை தாண்டி வேறு எதையுமே என்னால் நினைக்க முடியவில்லை. இந்த மாபெரும் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள், எனக்கு ஆதரவு தந்தவர்கள், ஊக்குவித்தவர்கள், விமர்சித்தவர்கள், கற்றுக்கொடுத்தவர்கள், அன்பு செலுத்தியவர்கள் எல்லாவற்றையும் விட என்னை நம்பியவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி. இனியும் எனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன்.
இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.