நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அப்படி பேசியதற்கு எதிராக பல திரை பிரபலங்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தார்கள். அதோடு நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து மன்சூரலிகானை கைது செய்ய வைத்தார். மேலும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியும் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த விவகாரம் சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், அது குறித்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் மன்சூர் அலிகான். என்றாலும் தற்போது அவர் திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்டஈடு வழக்கு தொடரப்போவதாக சொல்லி இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக இந்த பிரச்னை இத்தோடு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.