ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

'அதர்ஸ்' பட பிரஸ்மீட்டில் கவுரி கிஷனிடம் ஏடாகூட கேள்வி கேட்ட யூடியூப்பரை கண்டித்து நடிகைகள் ராதிகா, குஷ்பூ ,பாடகி சின்மயி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். தென்னிந்திய நடிகர் சங்கம், மலையாள நடிகர் சங்கமான அம்மா உள்ளிட்ட பல அமைப்புகளும் அந்த வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும் கவுரி கிருஷ்ணனுக்கு ஆதரவு கூடியது. அவரின் தைரியமான பேச்சை பல்வேறு தரப்பினர் பாராட்டினர்.
'96' படத்தின் மூலம் தான் கவுரி கிஷன் பிரபலமானார். அந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. அதில் சிறுவயது திரிஷா கதாபாத்திரமாக நடித்தவர் கவுரி கிஷன். அப்படியிருக்கையில் திரிஷா மட்டும் இதுவரை அந்த யூடியூப்பருக்கு எதிராகவும் கவுரி கிஷனுக்கு ஆதரவாக ஏதும் தெரிவிக்கவில்லை. இது சமூக வலைதளங்களில் விவாத பொருள் ஆகி உள்ளது.
அதே சமயம் '96' படத்தின் இயக்குனர் பிரேம்குமார் கவுரிக்கு ஆதரவாக பேசி உள்ளார். இந்த விஷயத்தில் பிக்பாஸ் தொகுப்பாளராக பல கருத்துக்களை சொல்லும் விஜய் சேதுபதியும் தன் படத்தில் நடித்த சக நடிகைக்கு ஆதரவு தெரிவிக்காத திரிஷாவும் செய்வது சரியா என கேள்வி எழுந்துள்ளது. இவரை போல் தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோயின்களும் கவுரிக்கு ஆதரவாக சோஷியல் மீடியாவில் கூட பதிவிடவில்லை.




