சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் | 'டூரிஸ்ட் பேமிலி' கனெக்ஷன் : போன வாரம், இந்த வாரம்… |

இயக்குனர் பாலா, வெற்றிமாறன், ராம் ஆகியோர் இயக்குனர் பாலுமகேந்திராவின் சிஷ்யர்கள். ஆனால், இவர்கள் பல்வேறு காரணங்கள், நேரம் காரணமாக ஒரே மேடையில் இருந்தது இல்லை. ராம் இயக்கும் பறந்து போ பட விழாவில் இந்த மூவரும் மேடை ஏறினார்கள். ‛உங்க காலில் விழுந்து கேட்கிறேன். பறந்து போ படத்தை ஓட வையுங்கள்' என்று பாலா வேண்டுகோள் வைத்தார். வெற்றிமாறனும் ராமை புகழ்ந்தார்.
ராம் பேசுகையில் ‛‛என் படங்களில் தொடர்ச்சியாக ஏன் அஞ்சலி என்று கேட்கிறாார்கள். கற்றது தமிழ் படத்தில் அவரை அறிமுகப்படுத்தினேன். அந்த சமயத்தில் மகாராஷ்டிராவில் படப்பிடிப்பு நடந்தபோது அவருக்கு அடிபட்டது. இன்றுவரை அந்த விபத்து குறித்து சொல்லவில்லை. தரமணி, பேரன்பு படங்களில் கமர்ஷியல், வியாபார விஷயங்களுக்காக ஒரு ஹீரோயின் வேண்டும் என்றபோது, நான் அஞ்சலிக்குதான் போன் செய்தேன். ஏழுகடல் ஏழு மலை படத்திலும் அது நடந்தது. இந்த படத்தில் ஒரு தமிழ் ஹீரோயின் வேண்டும் என ஹாட்ஸ்டார் சொன்னபோதும் அவருக்கு போன் செய்தேன். சின்ன கேரக்டர், கவுரவ வேடம். தனக்கு செட்டாகாத கேரக்டர் என்றாலும் அவர் எனக்காக நடித்து கொடுக்கிறார். என் வீட்டில் என் மகள், மகன் மாதிரி அவரும் ஒரு உறுப்பினர்'' என்றார்.




