விஜய் மேனேஜர் குறித்து நடிகை ஓவியா அதிரடி பதிவு | டிமாண்டி காலனி 6 பாகங்கள் வரை வரும் : இயக்குனர் தகவல் | 'தி பாரடைஸ்' மறு படப்பிடிப்பா? : தயாரிப்பு தரப்பு மறுப்பு | ஜோதிகாவின் ஹிந்தி படம் 'சிஸ்டம்' : 22ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது | பிளாஷ்பேக் : 'அன்னக்கிளி'யை வெற்றிக் கிளியாக்கிய அந்த 3 டிக்கெட் | பிளாஷ்பேக் : தன் பாடல்களை கூட கேட்க முடியாமல் போன இசை அமைப்பாளர் | ஆர்த்தி ரவி குறித்து பேச கெனிஷாவுக்கு கோர்ட் தடை | நடிகர் சங்க பதவியில் இருந்து விலகிய 'திரிஷ்யம்' பட நடிகை | 'கருப்பு'க்கு கடைசிநேரத்தில் வந்த சிக்கல் : களத்தில் சூர்யா | உங்களுக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருந்தாரா ? ; மோகன்லால் மகனை மடக்கிய எஸ்தர் அனில் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த அஜித் குமார், அதையடுத்து கார் பந்தயங்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இந்த நேரத்தில் அஜித்தின் 64வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்கப் போவதாகவும், அந்த படம் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. என்றாலும் அஜித் தரப்பு அது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடாமல் இருந்தார்கள்.
இந்தநிலையில் இன்று அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், அஜித்தின் 64-வது படம் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் கூடிய சீக்கிரமே அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது தெரிய வந்திருக்கிறது. அப்போதுதான் அஜித் 64 வது படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே இயக்குகிறாரா? இல்லை வேறு இயக்குனர் இயக்குகிறாரா? என்பது தெரியவரும்.