ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

சினிமாவில் இயக்குனராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா, ஒரு கட்டத்தில் தானே இயக்கி, நடித்தார். பின்னர், மற்றவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது தமிழ், தெலுங்கில் பிஸியான வில்லன் நடிகர் ஆகிவிட்டார். விளைவு, கடந்த 10 ஆண்டுகளாக அவர் படம் இயக்கவில்லை. இசை படத்தை இயக்கியவர் கடந்த 10 ஆண்டுகளாக நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், கில்லர் என்ற படத்தை 10 ஆண்டுகளுக்குபின் இயக்கி அவரே நடிக்கப் போகிறார். காதல், காமெடி, ஆக் ஷன் கலந்த இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மட்டுமல்ல, மெக்சிகோவிலும் நடக்க உள்ளது. தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் யோகிபாபு, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இரண்டுபேரும் ஓய்வே இல்லாமல், தாங்கள் நடிக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு கூட செல்ல முடியாமல், அந்த படம் குறித்து மீடியாவில் பேச முடியாத அளவுக்கு பிஸியாக இருக்கிறார்கள்.
கில்லர் படம் குறித்து பேசியுள்ள எஸ்.ஜே.சூர்யா, ‛‛இது எனது கனவுப்படம். சில வருடங்களாகவே இதன் திரைக்கதையை எழுதி வந்தேன். இது மக்களை உற்சாகப்படுத்தும் படமாக இருக்கும். லாக் டவுன் காலத்தில் இந்த படக்கதையை எழுதிவிட்டேன். இப்போதுதான் இயக்க நேரம் கிடைத்தது. எம்ஜிஆர் மாதிரி ஜனரஞ்சக படங்களை கொடுக்க வேண்டும் என்பது என் ஆசை. 5 மொழிகளில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும், மேலும் சில முக்கியமான காட்சிகள் மெக்சிகோ நாட்டிலும் மடமாகிறது'' என்கிறார்.




