ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

தற்போது ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தை அடுத்து ‛சர்தார் -2 , ப்ரோ கோடு' போன்ற படங்களில் வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, இன்னொரு பக்கம் தனது கனவு படமான ‛கில்லர்' படத்தையும் இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், தற்போது ரஜினியின் ‛ஜெயிலர்-2' படத்திலும் இணைந்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. நெல்சன் இயக்கும் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் பாலகிருஷ்ணா, மோகன்லால், சிவராஜ்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்க போகிறாராம் நெல்சன். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா எந்த மாதிரி ஒரு வேடத்தில் நடிக்கிறார் என்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருந்தாலும் ஜெயிலர் படத்தில் விநாயகம் நடித்தது போன்று ஒரு நெகட்டிவ் ரோலில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது.




