கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம்! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் டிராகன்! | பக்தி முதல் காமெடி வரை: இந்த வாரம் வரிசை கட்டும் ஓடிடி ரிலீஸ் | ‛காட்டி' புரமோஷனுக்கு வராமல் எக்ஸ் தளத்தில் 'சாட்டிங்' மட்டும் செய்த அனுஷ்கா | வெளியான இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் 'கண்ணப்பா' | மேற்கத்திய நாடுகள் பிரச்னையைப் பேசும் 'மதராஸி' | காதலனுக்காக தயாரிப்பாளரான நடிகை | அதிக வேலையால் வாழ்க்கையை இழந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை | பிளாஷ்பேக்: நறுக் வசனத்தில் முதல் படம் | பிளாஷ்பேக்: முதல் படமே தோல்வி: துவண்டுபோன சவுகார் ஜானகி |
2015ம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வெளியான 'இசை' படத்திற்கு பிறகு நடிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு 'கில்லர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் மற்றும் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றது. இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எஸ்.ஜே. சூர்யா வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டரில் கோட் ஷூட் உடையில் ஸ்டைலான எஸ்.ஜே. சூர்யா, பிரீத்தி அஸ்ராணியை கடத்தி செல்வது போல் உள்ளது. குறிப்பாக பின்னனியில் கில்லர் படத்திற்காக எஸ்.ஜே. சூர்யா பிரத்யேகமாக வாங்கிய பி.எம்.டபிள்யூ கார் உள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.