ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

அயோத்தி படத்தில் ஹோம்லியாக நடித்த ப்ரீத்தி அஸ்ராணி, லேட்டஸ்ட்டாக வந்து இருக்கும் கவினின் கிஸ் படத்தில் மார்டனாக வந்தார். அவரா? இவர் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். அடுத்து அவர் நடிப்பில் பல்டி படம் வெளியாக உள்ளது. இது மலையாள படம் என்றாலும் பாலக்காடு ஏரியாவில் நடப்பதால் பல கேரக்டர்கள் தமிழ் பேசுகின்றன. பாதி தமிழ்ப்படம் மாதிரி உருவாகி உள்ளாம். சாந்தனு, ஷேன்நிகம் நடித்துள்ளனர். இதில் ஓரளவு மார்டனாக நடித்துள்ளார் ப்ரீத்தி அஸ்ராணி.
படம் குறித்து பேசிய ப்ரீத்தி, ‛‛இது என் முதல் மலையாள படம், எனக்கு மலையாளம் தெரியாது. ஆனாலும், என்னை நம்பி இந்த கேரக்டரை கொடுத்தனர். கபடி விளையாட்டு பின்னணியில் இந்த கதை உருவாகி உள்ளது. இந்த படத்தில் பெற்ற ஜாலக்காரி பாடல் ஹிட்டாகி உள்ளது. அந்த பாடலை கொடுத்த இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு நன்றி. இந்த பட இயக்குனர் உன்னி கிருஷ்ணன் எனக்கு அண்ணா மாதிரி. எனக்கு நிறைய சொல்லிக் கொடுத்தார். என் படங்களில் இது வித்தியாமாக இருக்கும் என்கிறார்.
அடுத்து எஸ்.ஜே. சூர்யா இயக்கி, நடிக்கும் கில்லர் படத்தில் கவர்ச்சியாக நடித்துள்ளார் ப்ரீத்தி அஸ்ராணி. இவரின் தாய்மொழி தெலுங்கு அங்கே பல படங்களில் நடித்து இருக்கிறார்.




