பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் மறைவு | பவிஷ் ஜோடியாகும் குஷ்பு மகள் அவந்திகா | நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது |

2015ம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடித்து வெளியான 'இசை' படத்திற்கு பிறகு நடிப்பதிலேயே மும்முரமாக இருந்தார். தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தததால், இயக்குநர் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார். ஆனால் சில வருடங்களாக அவரது அடுத்த படத்திற்காக பிரம்மாண்ட கார் ஒன்றை மட்டும் வாங்கியிருந்தார் எஸ்.ஜே.சூர்யா.
'கில்லர்' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தினை இயக்கி, நாயகனாக நடிக்கவுள்ளார் . இதில் கதாநாயகியாக பிரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். இப்படத்தை கோகுலம் மூவிஸ் மற்றும் ஏஞ்சல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர் .
தற்போது இந்த படத்தில் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். இதன் மூலம் நியூ, கொமரம் புலி, அன்பே ஆருயிரே படங்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி நான்காவது முறையாக கில்லர் படத்திற்கு இணைந்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.