லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரித்துள்ள படம் 'பிரீடம்'. 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கி உள்ளார். சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடித்துள்ளனர். இந்த படத்தின் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் தேர்வானது குறித்து இயக்குனர் சத்யசிவா கூறும்போது
"இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம். ஒருவரை நல்லவராகக் காட்ட, சில காட்சிகள் வைக்க வேண்டும். ஆனால் சசிக்குமாரை காட்டினாலே போதும். அதே மாதிரி அப்பாவி, ஏழ்மையானவர் எனும்போது, லிஜோ மோலை காட்டினாலே போதும், தனியாகக் காட்சி வைக்கத் தேவையில்லை.
படத்தின் முதல் ஷெட்யூலில் நாயகி இன்றியே படப்பிடிப்பு நடந்தது, கதைக்கேற்ற நாயகியே தேடிக் கொண்டே இருந்தோம். கடைசியாக லிஜோவை தேர்வு செய்தோம். காரணம் ஜெய்பீமில் அவரது நடிப்பு. அவரை பார்த்த உடனேயே ஒரு அப்பாவி பெண் என்ற நினைப்பு வந்து விடும், அமைதியான அடக்கமான பெண் என்கிற எண்ணம் வந்து விடும் அதற்காகவே அவரை தேர்வு செய்தோம். அவர் மலையாளியாக இருந்தாலும் இலங்கைத் தமிழைக் கற்றுக் கொண்டு பேசியுள்ளார் . லிஜோ வந்த பிறகு இந்தப்படம் வேறு மாதிரியாக இருந்தது" என்றார்.