கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை | இது மட்டும் நடந்தால் பிசாசு 2 படத்தை நானே ரிலீஸ் செய்வேன் : ஆண்ட்ரியா |

மம்முட்டி நடிப்பில் அடுத்ததாக வரும் நவம்பர் 28ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வந்த படம் களம் காவல். மம்முட்டியே இந்த படத்தை தயாரித்து உள்ளார். ஜிதின் ஜோசப் இயக்கியுள்ளார். ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தின் சிறப்பம்சமாக மம்முட்டி வித்தியாசமான ஒரு வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலேயே நடித்து வரும் நடிகர் விநாயகன் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக பாசிட்டிவ் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இந்த வித்தியாசமான மாற்றங்களுக்காகவே இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று மம்முட்டியே நேரடியாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்துள்ளார். படத்தின் ஒடிடி உரிமை கைமாறுவதில் ஏற்பட்ட தேதி சிக்கல் காரணமாக இப்படி திடீரென இந்த படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.




