ரத்தம் தெறிக்கும் டிசி படத்தின் டிரைலர் | கருப்பு படத்தில் முதல்வர் விஜய்க்கு நன்றி கார்டு | பூஜா ஹெக்டேவின் நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் முதல் படம் | முதல் நாளே 10 கோடி வசூலை தாண்டிய ‛அதிரடி' திரைப்படம் | துரந்தர் 2 : ஓயே ஓயே பாடலுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | முதல்வர் விஜயை சந்தித்து கமல் வைத்த 6 கோரிக்கை | இந்நாள் முதல்வரையும், முன்னாள் முதல்வரையும் அடுத்தடுத்து சந்தித்த நாசர் | சம்பளம் பற்றி வெளிப்படையாகச் சொன்ன சனம் ஷெட்டி | கருப்பு : முதல் நாள் வசூல் எவ்வளவு ? | துரந்தர் 2 : ஓடிடி வெளியீடு இரண்டு வாரம் தள்ளி வைப்பு |

சமீபத்தில் தெலுங்கில் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கதாநாயகியை மையப்படுத்திய தி கேர்ள் பிரண்ட் என்கிற படம் வெளியாகி வெற்றியை பெற்றுள்ளது. நடிகரும், பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன் இதை இயக்கியிருந்தார். படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட திரை உலகை சேர்ந்த தீக்ஷித் ஷெட்டி என்பவர் கதாநாயகனாக நடித்திருந்தார். கன்னடத்தில் அவர் முன்னணி நடிகர்கள் வரிசையில் இல்லாவிட்டாலும் கேர்ள் ப்ரண்ட் படத்தின் மூலம் அவருக்கு திடீர் புகழ் வெளிச்சம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக அவர் கன்னடத்தில் ஹீரோவாக நடித்துள்ள பேங்க் ஆப் பாக்கியலட்சுமி என்கிற படத்தை இன்று ரிலீஸ் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள்.
ஆனால் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போய், வரும் நவம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். இதற்கு காரணம் இதே தேதியிலேயே கிட்டத்தட்ட ஆறு படங்களுக்கு மேல் வெளியாவதால், போட்டியை தவிர்க்கும் விதமாக இந்த படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. வங்கி கொள்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷேக் காசர்கோடு என்பவர் இயக்கியுள்ளார்.