லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பாலிவுட்டில் இருந்து வந்திருக்கும் காஜல் அகர்வால் தற்போது தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு ஒரே படத்தில் நடித்து விட்டு மூட்டை கட்டிய காஜல் ஒருவரும் இருந்திருக்கிறார்.
1977ம் ஆண்டு வெளியான'ஹம் கிசிசே கம் நஹீன்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் காஜல் கிரண். இந்த படம் சூப்பர் ஹிட். உடனேயே, காஜல் கிரண் பாலிவுட்டில் ஒரு நிலையான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். அதன்பிறகு 13 ஆண்டுகளில் 40 படங்களில் நடித்தார்.
ரிஷி கபூருடன் நடித்த 'ஹம் கிசிசே கம் நஹீன்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது மற்றும் அந்த ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த படமாக மாறியது. இதைத் தொடர்ந்து, காஜல் கிரண் பல படங்களில் முன்னணி வேடத்தில் நடித்தார். அவற்றில் ஜிதேந்திராவின் 'மாங் பரோ சஜனா', மிதுன் சக்ரவர்த்தியின் 'வர்தாத்', 'ஹம் சே பட்கர் கவுன்' மற்றும் 'சபூத்' போன்றவை முக்கியமானவை. ஆனால் ஒரு கட்டத்தில் திடீரென சினிமாவில் இருந்து விலகிக் கொண்டார்.
தமிழில் 1985ம் ஆண்டு வெளிவந்த 'பந்தம்' படத்தில் நடித்தார். இதில் அவர் சிவாஜியின் மகளாகவும், ஆனந்த் பாபுவின் காதலியாகவும் நடித்தார். மேலும் இந்த படத்தில் ஷாலினி, நிழல்கள் ரவி, ஜெய்சங்கர், மனோரமா, வினு சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். கே.விஜயன் இயக்கி இருந்தார்.
இது 'சக்கரயும்மா ' என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். பணக்கார தந்தையின் மகள் ஒரு ஏழை வாலிபனை திருமணம் செய்து கொள்வதும், தந்தை பாசத்தால் துடிப்பதும், பின்னர் குடும்பம் ஒன்று சேர்வது மாதிரியான கதை.