லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
சினிமாவில் கமல், 'சகலகலாவல்லவர்' தான். அதை நிரூபிப்பது மாதிரி ஒரு நிகழ்வு. இது நடந்தது 1962ம் ஆண்டு. அப்போது கமல் 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். தமிழ்நாடே 'குழந்தைன்னு இருந்தா இப்படி ஒரு குழந்தை இருக்கணும்' என்று பேசிக் கொண்டிருந்த நேரம். கமலை நேரில் பார்க்க மாட்டோமா என்று தமிழ்நாடு ஏங்கிக்கிடந்த நேரம்.
கமலின் அப்பா சீனிவாச அய்யங்கார் காங்கிரஸ்காரர், அவரது நண்பர் தென்காசி அருகே உள்ள இலஞ்சியை சேர்ந்த சங்கு தேவர். இவரின் மகன் டாக்டர் ஜே.எஸ்.ஆர்.பாண்டியனுக்கு திருமணம். அதற்காக சீனிவாச அய்யரிடம் அழைப்பிதழ் கொடுத்த சங்கு தேவர் கூடவே ஒரு கோரிக்கையும் வைத்தார். 'எங்க வீட்டு திருமண நிகழ்வுக்கு உங்க மகன் கமல் வர வேண்டும்' என்றார். அதற்கு சீனிவாசன், 'வர்றது என்ன வந்து ஆடச் சொல்றேன்' என்றார்.
அந்த திருமண நிகழ்ச்சியில் கமலும், அவரது சகோதரி நளினியும் மேடையில் குறவன், குறத்தி நடனம் ஆடினார்கள். அதோடு கமல் களத்தூர் கண்ணம்மா படத்தில் இடம்பெற்ற 'அம்மாவும் நீயே அப்பாவும் நீயே' பாடலையும் பாடினார். கமலை பார்ப்பதற்காக திருமண வீட்டை சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் நின்று கொண்டிருந்தாக சொல்வார்கள்.
கமல்ஹாசன் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியின் படங்களை தற்போதும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்கள் டாக்டர் பாண்டியன் குடும்பத்தினர். பிற்காலத்தில் அவர் உலக நாயகனாக வருவார் என்பதெல்லாம் அப்போது அவர்களுக்கு தெரியாது.