தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை தொடர்ந்து ஸ்ரீ கணேஷ் இயக்கி உள்ள மூன்றாவது படம் ‛3BHK'. கடந்த ஜூலை நான்காம் தேதி திரைக்கு வந்த இந்த படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். யதார்த்தமான கதையில் உருவாகியுள்ள இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் வசூல் சுமாரான அளவிலேயே இருந்தது. இதனால் படக்குழுவினர் இப்போது ஒவ்வொரு ஊராக சென்று படத்தை புரொமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ‛3BHK' படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியிருக்கிறது. அதில் இந்த படம் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.4.8 கோடி வசூல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




