நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
தெருவுக்கு தெரு டீக்கடை இருப்பது போல, ரியல் எஸ்டேட் பிஸ்னஸூம் கொடிக்கட்டி பறக்கிறது. இடம், வீடு வாங்குவது அனைவரின் கனவாக இருக்கும் நிலையில், இந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அவர்களுக்கே வலை விரிக்கின்றனர். குறிப்பாக சென்னைக்கு 50, 60 கி.மீ தொலைவில் உள்ள இடத்தையும், மிக அருகில் மிக அருகில் என சொல்லி சொல்லி விற்று விடுகின்றனர். பலரும் அந்த விளம்பரங்களை நம்பி முதலீடு செய்து சிலர் ஏமாற்றத்தையும் சேர்த்தே பெறுகின்றனர்.
அந்த வகையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்து, நில மோசடி வழக்கில் சிக்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. அதாவது ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த மகேஷ்பாபு, அதில் இல்லாத ஒரு இடத்தின் பெயரையும் குறிப்பிட்டு நடித்துள்ளார். இதனை நம்பி முதலீடு செய்த ஒருவர், தான் நஷ்டம் அடைந்ததாக தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத்துறை
கடந்த ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை சார்பில் நடிகர் மகேஷ்பாபுவுக்கு சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட பண மோசடி விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் பிராண்ட் அம்பாஸ்டராக அவர் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மகேஷ் பாபு பணம் மற்றும் செக் மூலமாக ரூ.5.9 கோடிகள் பெற்றதாக கூறப்படுகிறது. இதில் பணம் மட்டுமல்லாமல், சட்ட விரோதமாக வேறு ஏதேனும் பொருள் அல்லது அசையும், அசையா சொத்தும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரித்து வருகிறது.
இல்லாத இடம்
மேலும், சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமத்தின் ரியல் எஸ்டேட் விளம்பரத்தில் நடித்த மகேஷ்பாபு, அதில் அவர் பயன்படுத்திய பெயர்களில் இல்லாத ஒரு இடத்தின் பெயரையும் சொல்லியுள்ளார். அதுதான் தற்போதைய பிரச்னைக்கு காரணம். மருத்துவர் ஒருவர் அளித்த புகாரில், அந்த விளம்பரத்தில் மகேஷ்பாபு இல்லாத ஒரு இடத்தின் பெயரை பயன்படுத்தியிருப்பார். அதனை நம்பி முதலீடு செய்ததில் ரூ.34.8 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது என குறிப்பிட்டு ரங்காரெட்டி மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகாரளித்துள்ளார். அதன்பேரில், மகேஷ்பாபுவுக்கு நுகர்வோர் ஆணையம், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விரைவில் விசாரணைக்கு ஆஜராகலாம் என்கின்றனர்.