பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் கடந்த வாரம் மலையாளத்தில் ஆவேசம் என்கிற படம் வெளியானது. ஜித்து மாதவன் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக நகைச்சுவை பின்னணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் பஹத் பாசிலின் கதாபாத்திரமும் அதை படம் முழுவதும் அவர் வெளிப்படுத்திய விதமும் ரசிகர்களையும் தாண்டி திரையுலக பிரபலங்களையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
சமீபத்தில் இந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை சமந்தா ஆகியோர பஹத் பாசில் நடிப்பு குறித்து தங்களது பிரமிப்பு கலந்த பாராட்டுகளை சமீபத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். இந்த பட்டியலில் லேட்டஸ்டாக நடிகை நயன்தாராவும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆவேசம் இந்த தசாப்தத்திற்கான சினிமா வெற்றி. ஜித்து மாதவனின் அருமையான கதை இனிவரும் நாட்களில் கமர்சியல் படங்களுக்கான எல்லையை வகுத்துக் கொடுத்துள்ளது. பஹத் பாசில் நிஜமாகவே சூப்பர் ஸ்டார். என்ன ஒரு ஆளைக் கொல்லும் நடிப்பு..! மாஸ்.. உங்களுடைய நம்பவே முடியாத ஒவ்வொரு பெர்பார்மன்ஸையும் அணு அணுவாக ரசித்தேன்” என்று பாராட்டியுள்ளார்.
அதுமட்டுமல்ல படத்தின் தயாரிப்பாளரான நடிகை நஸ்ரியாவுக்கும் தனது பாராட்டுக்களை வழங்கியுள்ள நயன்தாரா, “உன்னை பார்த்து ரொம்பவே பெருமைப்படுகிறேன் பேபி” என்று கூறியுள்ளார். மேலும் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களையும் பாராட்டியுள்ள நயன்தாரா, உங்களுடைய தவிர்த்து கல்லூரி மாணவர்களாக மூன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இளம் நடிகர்களையும் குறிப்பிட்டு பாராட்டியதுடன், “பசங்களா.. இந்த படத்தின் நிஜமான ராக் ஸ்டார்களாக நீங்கள் இருந்திருக்கிறீர்கள்” என்றும் கூறியுள்ளார்.
சமீப காலத்தில் நயன்தாரா ஒரு படத்தை இவ்வளவு சிலாகித்து பாராட்டி இருக்கிறார் என்றால் அது ஆவேசம் படத்திற்கு மட்டுமே கிடைத்த பெருமை என்று சொல்லலாம்.