பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகை நயன்தாரா வளரும் இளம் நடிகரான கவினுடன் நடிக்கும் படத்திற்கு 'ஹாய்' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ, ஜி ஸ்டூடியோவுடன் இணைந்து நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
படத்தை லோகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடவன் இயக்குகிறார். இயக்குனர் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர், குரேஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார், ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விஷ்ணு எடவன் கூறும்போது "ஹாய்' முழுக்க முழுக்க பொழுதுபோக்கான குடும்ப கதையில் உண்மையான காதலையும் கூறும் படமாக உருவாகி வருகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடந்து வருகிறது. 20 நாட்கள் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெறும். இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் உள்ளன. அதில் இரண்டு பாடல்கள் முழுமையாக காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.