ஜன. 30ல் திரைக்கு வரும் ‛தலைவர் தம்பி தலைமையில்' | 'பாபு, ஏய்' படங்களின் 'உல்டா' தான் 'பகவந்த் கேசரி', அதன் ரீமேக் தான் 'ஜனநாயகன்' | பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி |

மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகமாகி குணச்சித்திர மற்றும் கதையின் நாயகனாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. தமிழில் பீஸ்ட் படத்தில் நடித்த இவர் அந்த படம் குறித்தும் விஜய் குறித்தும் கிண்டலாக பேசி சர்ச்சையில் சிக்கினார். தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் வில்லனாக நடித்து வரும் ஷைன் டாம் சாக்கோ இந்த வருடம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கும் தனுஜா என்கிற மாடல் அழகிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மணப்பெண் சாக்கோவின் நீண்டநாள் தோழியும் கூட. இந்த நிலையில் சமீபத்தில் சாக்கோ தனது சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து தாங்கள் இருவரும் எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படங்களை நீக்கியுள்ளார்.
இப்படி காதல் ஜோடிகள் தங்கள் புகைப்படத்தை நீக்கினாலே இருவருக்கும் பிரேக்கப் என்பது போலத்தான் உடனே செய்திகள் பரவ ஆரம்பிக்கும். இவர்கள் விஷயத்திலும் அதே போல செய்தி பரவ ஆரம்பிக்க, சாக்கோவின் காதலி தனுஜா தாங்கள் இருவரும் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ஒன்றை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தங்களுக்குள் பிரிவில்லை என இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.