10 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் தெறி | கிராமத்து கெட்டப்பில் வெளியான ஐஸ்வர்யா ராஜேஷின் ‛ஓ சுகுமாரி' முதல் பார்வை | கவர்ச்சி நடனம் ஆடிய ரஜிஷா விஜயன் | ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... |

மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜீத்து ஜோசப் தனது 'திரிஷ்யம்' படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய அளவில் தனக்கு என ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அதற்கேற்றபடி தற்போது 'திரிஷ்யம்-3' படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி வருகிறார். அக்டோபரில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
அதே சமயம் இதற்கு முன்னதாக அவர் சிறிய பட்ஜெட்டில் பிரபல மலையாள நடிகர்களாக பிஜுமேனன் மற்றும் ஜோஜூ ஜார்ஜ் இருவரையும் கதையின் நாயகர்களாக வைத்து 'வலது வசத்தே கள்ளன்' என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார். இந்த படம் வரும் ஜனவரி 30ம் தேதி வெளியாக இருக்கிறது. நீதிமன்றம் அதன் தீர்ப்புகள் ஏற்படுத்தும் தாக்கம் இவற்றின் பின்னணியில், ஜீத்து ஜோசப்பின் பாணியில் வழக்கமான சில டுவிஸ்ட்டுகள் கலந்து இந்த கதை உருவாகி இருப்பதாக சொல்லப்படுகிறது.