பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? |

தெலுங்கு திரையுலகில் நடிகர் நாகார்ஜுனா-அமலா தம்பதியின் மகனாக வாரிசு நடிகராக அறிமுகமானவர் நடிகர் அகில். இவர் நடிப்பில் கடந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான 'ஏஜென்ட்' திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. அந்த படத்தை தயாரித்த அனில் சுங்கரா மற்றும் அதை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு பல கோடி நஷ்டத்தையும் கொடுத்தது. தற்போது தனது தந்தை நாகார்ஜுனா மற்றும் தயாரிப்பாளர் நாக வம்சி இணைந்து தயாரித்து வரும் 'லெனின்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் அகில்.
இந்த படத்தை முடித்ததும் ஏஜென்ட் பட தயாரிப்பாளர் அனில் சுங்கராவுக்கு அடுத்த படத்தில் தான் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார் அகில். மேலும் அந்த படத்தை மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்குமாறும் அதில் வரும் லாபத்தை வைத்து ஏஜென்ட் பட நஷ்டத்தை தயாரிப்பாளரும் விநியோகஸ்தர்களும் சரி செய்து கொள்ளுங்கள் என்றும் வாக்குறுதி கொடுத்துள்ளாராம் அகில்.




