2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

நடிகர் மம்முட்டி கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு காரணமாக ஓய்வெடுத்து வந்தவர், தற்போது மீண்டும் சுறுசுறுப்பாக தனது படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் மோகன்லாலுடன் தான் இணைந்து நடித்து வரும் 'பேட்ரியாட்' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தான் நிறைவு செய்தார் மம்முட்டி. அதுமட்டுமல்லாமல் சில படங்களில் நட்புக்காக கெஸ்ட் ரோல்களிலும் நடித்து வருகிறார் மம்முட்டி. அந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் 'சத்தா பச்சா' படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் மம்முட்டி.
இதை அடுத்து 'தொடரும்' படத்தில் வில்லனாக அறிமுகமாகி மிரட்டிய நடிகர் பிரகாஷ் வர்மா தற்போது ஹீரோவாக நடிக்க, பிரபல இயக்குனர் ரஞ்சித் இயக்க உள்ள புதிய படத்திலும் நட்புக்காக மம்முட்டி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 2004ல் மம்முட்டி நடித்த பிளாக் திரைப்படத்தில் அவர் கரிக்காமுரி சண்முகம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே கதாபாத்திரத்தில் தான் இந்த படத்தில் கேமியோ ரோலில் தோன்றுகிறாராம் மம்முட்டி. இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.




