பொங்கல் நாள் வாழ்த்துகளைக் குவித்த படங்கள் | ஜனவரி 23ல் நிவின்பாலியின் 'பேபி கேர்ள்' ரிலீஸ் | ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' |

மோகன்லால் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான படம் திரிஷ்யம். இதே படத்தை தமிழில் கமலஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதன் பிறகு மீண்டும் மோகன்லால் நடிப்பில் திரிஷ்யம் 2 படத்தை 2021 ஆம் ஆண்டு இயக்கிய ஜீத்து ஜோசப், தற்போது அப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் இயக்கி உள்ளார். இந்த மூன்று பாகங்களிலுமே மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்து ஜீத்து ஜோசப் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், திரிஷ்யம் ஒரு படமாக பலரை பாதித்துள்ளது. அதன் தாக்கத்தை இன்னும் தாங்கி வருகிறார்கள். இந்நிலையில் திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரத்தில் நீங்கள் பார்க்கலாம் என்றார். அதோடு, இந்த மூன்றாம் பாகத்தை அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பார்க்க வருமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் ஜீத்து ஜோசப்.