இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளம் மட்டுமல்லாது ஹிந்தியிலும் அவ்வப்போது படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ஹிந்தியில் பூத் பங்களா என்கிற படத்தை இயக்குகிறார் பிரியதர்ஷன். கதாநாயகனாக அக்ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக தற்போது நடிகை தபு இந்த படத்தில் இணைந்துள்ளார். இதில் விசேஷம் என்னவென்றால் 26 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடிக்கிறார் தபு.
கடந்த 1997ல் ஹிந்தியில் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான விரசாத் என்கிற படத்தில் தபு நடித்திருந்தார். தேவர்மகன் ஹிந்தி ரீமேக்காக இந்த படம் வெளியானது, அதனை தொடர்ந்து மீண்டும் தமிழில் வெளியான சினேகிதியே படத்தில் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடித்தார் தபு. அந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 26 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அவரது டைரக்ஷனில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் தபு.