கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

2026ம் ஆண்டின் பொங்கல் இன்று ஜனவரி 15ம் தேதி மகிழ்ச்சிகரமாகக் கொண்டாடப்பட்டது. பொங்கலை முன்னிட்டு தமிழ் சினிமாவில் மூன்றே படங்கள் வெளிவந்தாலும், இன்றைய பொங்கல் நாளில் எண்ணற்ற படங்களின் வாழ்த்துகள் வெளிவந்துள்ளது. அடுத்தடுத்த வாரங்களில், மாதங்களில் அந்தப் படங்கள் வெளியாக உள்ளன. முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்து சிறிய நடிகர்கள், அறிமுக நடிகர்கள் படங்கள் வரையில் இன்று பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து அப்டேட்களைக் கொடுத்துள்ளார்கள்.
அகர வரிசைப்படி, “ஆல் பாஸ், ஆழி, அருள்வான், அறுவடை, பயம், கப்புள் பிரண்ட்லி, டார்க் ஹெவன், டாஷமக்கான், டயங்கரம், டபுள் கேம், ஹைலெஸோ, கர, லெனின் பாண்டியன், மூன்வாக், மைலாஞ்சி, ஓ சுகுமாரி, பாரிஸ் கேப், பீட்டர், பூக்கி, சர்தார் 2, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி, தாய் கிழவி, தளிர், தெரிஞ்சா காதலிங்க, வீர நகரம்,” உள்ளிட்ட படங்களின் பொங்கல் வாழ்த்து போஸ்டர்களும், அந்தப் படங்களைப் பற்றிய சில அப்டேட்களும் இன்று வெளியிடப்பட்டுள்ளன.




