Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் | 8 வார இடைவெளியில் ஓடிடி, தயாரிப்பாளர்கள் சம்மதிப்பார்களா? | அல்லு சினிமாஸ் 'புகழ் சுவர்' - அட்லிக்கு இடம் தந்த அல்லு அர்ஜுன் | மார்ச் 15 முதல் புதிய படங்களுக்கு சப் டைட்டில், ஆடியோ விளக்கம் கட்டாயம் | லாரி ஏறிச் சென்று படம் பார்த்தேன்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - கமல் இணையும் பட அறிவிப்பு நாளை வெளியாகிறது

19 பிப், 2026 - 01:51 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-Kamal-pairing-film-Announcement-to-be-made-today
Advertisement

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். கடைசியாக 1979ல் வந்த 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தனர். அதன்பிறகு இருவரும் தனித்தனி பாதையில் சினிமாவில் பயணித்து வந்தாலும், இருவருக்குள்ளும் ஆழமான நட்பு இன்றளவும் தொடர்கிறது. பல நிகழ்ச்சி மேடைகளில் தங்களின் நட்பை சிலாகித்து பேசியிருப்பார்கள் இருவரும்.

தமிழ் சினிமாவில் பல காலமாக கோலோச்சியிருக்கும் இவர்கள் மீண்டும் இணைந்து நடித்தால் மிகப்பிரமாண்டமாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பாக இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவித்தனர். இது, இந்திய சினிமா ரசிகர்களை பலத்த எதிர்பார்ப்பை தூண்டியது. ஆனால், இவர்கள் இணையும் படத்தை யார் இயக்குவார், யார் இசையமைப்பார் என்ற கேள்விகள் அடுத்தடுத்து எழத் துவங்கியது.

கமல், ரஜினியை தனித்தனியாக இயக்கிய லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பல இயக்குனர்களும் இவர்களுக்கான கதையை சொல்லி வந்தனர். இறுதியில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தான் இயக்க உள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவியது. இதற்கான புரோமோ ஷூட்டிங்கும் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. நெல்சன் தற்போது ரஜினியை வைத்து 'ஜெயிலர் 2' படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்ட போஸ்டரில், இரு நட்சத்திரங்கள் எதிரெதிராக சந்திப்பது போன்றும், 'உலகங்கள் ஒன்றிணையும் போது, ஒரு பக்கம் சாய்வதேது?' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. மேலும், 'சில கதைகள் விதிகளைப் பின்பற்றுகின்றன. சில படங்கள் அவற்றை மீண்டும் எழுதுகின்றன. ஆர்வமாக இருங்கள். உற்சாகமாக இருங்கள். அடுத்த அப்டேட் இரவு 7:12 மணிக்கு' என்றும் குறிப்பிட்டனர்.

கமலின் பிறந்தநாளான நவம்பர் 7, ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆகியவற்றை குறிப்பிடும் நோக்கில் 7:12 மணிக்கு அப்டேட், இரு நட்சத்திரங்களின் குறியீடு, உலகங்கள் ஒன்றிணைவு பற்றிய வாசகங்கள் என இதனை வைத்து பார்க்கையில் இது ரஜினி, கமல் இணையும் படத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.



இந்நிலையில் 7:12 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் பழைய டைப் பென்ஸ் கார் ஒன்று இடம் பெற்றுள்ளது. அதோடு KH(கமல் ஹாசன்) RK (ரஜினிகாந்த்) என குறிப்பிட்டு அடுத்த அப்டேட் நாளை(பிப்., 20) வெளியாகும் என தெரிவித்துள்ளனர். அதோடு படம் பற்றிய அறிவிப்பு வீடியோ அல்லது போஸ்டர் பிப்., 21ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் துவங்குகிறதுதனுஷ் 55 படப்பிடிப்பு நாளை முதல் ... 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட இயக்குனருக்கு கிடைத்த வாய்ப்பு! 7 வருடங்களுக்குப் பிறகு தேவ் பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap