25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், ரகுவரன், ரேவதி, பிரபு மற்றும் பலர் நடிப்பில், குழந்தை நட்சத்திரங்கள் நிறைய பேர் முதன்மையாக நடிக்க 1990ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'அஞ்சலி'. அந்தக் காலத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற படம்.
படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை பேபி ஷாமிலி நடித்திருந்தார். அவரது அண்ணன் கதாபாத்திரத்தில் பிற்காலத்தில் தெலுங்கில் கதாநாயகனாக நடித்த தருண்குமார் நடித்திருந்தார். நடிகை ரோஜா ரமணி, நடிகர் சக்ரபாணி ஆகியோரின் மகன் தருண்குமார். தமிழில், ‛புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18' ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
'படம் வெளிவந்த காலத்தில் தமிழில் இன்றைய முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருக்கும் சிம்பு, அப்போது பிஸியான குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். சிறுவன் சிம்பு, 'அஞ்சலி' படத்தைப் பார்த்து, தன்னை அந்தப் படத்தில் நடிக்க மணிரத்னம் ஏன் அழைக்கவில்லை என அப்படி டி.ராஜேந்தரிடம் சண்டை போட்டிருக்கிறார். அது பற்றி நேற்று நடந்த 'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சிம்பு குறிப்பிட்டுள்ளார்.
“மணி சார் பத்தி சொல்லணும்னா உங்க யாருக்கும் தெரியாத ஒரு விஷயம் இருக்கு. 'அஞ்சலி'ன்னு ஒரு படம் எடுத்தாரு மணி சார். படத்துல முழுக்க சின்னப் பசங்க நடிச்சிருப்பாங்க. அதுல 'அஞ்சலி' பாப்பாவோ அண்ணனா சின்னப் பையன் ஒருத்தர், தெலுங்கு நடிகர் அவரு நடிச்சிருப்பாரு. அந்தப் படம் பார்த்துட்டு நான் ஓ…ன்னு அழ ஆரம்பிச்சிட்டேன். வீட்ல எங்க அப்பாகிட்ட, ஏன் மணி சார் இந்தப் படத்துக்கு என்னைக் கூப்பிடல, நானும் இதே வயசுதானே, நான் இங்கதானே நடிச்சிட்டிருக்கேன். ஏன் அவர் என்னைக் கூப்பிடலன்னு கேட்டதுக்கு அப்பா, 'இல்லப்பா, படத்துக்கு ஏத்த மாதிரி இருந்திருக்கும், வேற காரணம் ஏதாவது இருக்கும்னு, நான் சின்னப் பையனா இருக்கிறதால, ஆறுதல் சொன்னாரு.
அப்ப நான் நினைச்சேன், சரி இவர் நம்மளக் கூப்பிட மாட்டாரு. நமக்கும் இவருக்கும் செட்டாகாதுன்னு நினைச்சேன். வளர்ந்ததுக்கு அப்புறம், நான் நடிச்சதுலாம் மாஸ் மசாலா படங்கள்தான், உங்களுக்கே தெரியும். அப்படி இருந்த டைம்ல என் மேல 'ரெட் கார்டு'லாம் போடற ஒரு சூழ்நிலை வந்தது. அந்த டைம்ல நிறைய தயாரிப்பாளர்கள் பயந்தாங்க, இவரை வச்சி படம் பண்ணனுமா எதுக்கு, தேவையா, ஏதாவது பிரச்னை வந்துடப் போகுது அப்படின்னு…அந்த நேரத்துல படம் இல்ல. டைரக்டர்ஸ் யாருமே என்கிட்ட வரல. அப்ப ஒரு போன் வருது மெட்ராஸ் டாக்கீஸ்ல இருந்து, மணி சாரை நேர்ல போய் பார்த்தேன். சார், உண்மையிலயே நீங்கதான் என்னைக் கூப்பிட்டீங்களான்னு கேட்டேன்.
அந்த நேரத்துல எல்லாருமே என்னை வச்சி படம் பண்ண பயப்படும் போது, எந்த பயமும் இல்லாம, தைரியமா, இந்தப் பையனை நம்பி படத்தை எடுக்கலாம்னு ஒரு நம்பிக்கை வச்சி என்னைக் கூப்பிட்டீங்கல்ல சார், என்னைக்கும் நான் மறக்க மாட்டேன் சார், ரொம்ப நன்றி சார். 'செக்கச் சிவந்த வானம்' படம் மட்டுமில்ல, எல்லா படமும் மணி சார் முதன்முதலா என்னைக் கூப்பிட்டு கதை சொல்லியிருக்காரு. 'பொன்னியின் செல்வன்' படத்துக்கும் கூப்பிட்டாரு, சில விஷயங்களால பண்ண முடியல. அதுக்கப்புறம் 'தக் லைப்' படத்துக்கும் கூப்பிட்டாரு, முதல்ல கெட்-அப் சில விஷயங்களால பண்ண முடியாம இருந்தது. மறுபடியும் அந்த வாய்ப்பு வந்தது, சாதாரணமா வரல, கமல் சார் கூட வந்தது, இறைவனுக்கு நன்றியைத் தெரிவிச்சிக்கிறேன். மணி சார், எனக்கு ரொம்ப ஸ்பெஷல், காட்பாதர் மட்டுமல்ல, ஒரு குரு. இந்த பெரிய வாய்ப்பு, இப்படி ஒரு கேரக்டர் கொடுத்ததுக்கு என்னைக்குமே மறக்க மாட்டேன்,” என்று பேசினார் சிலம்பரசன்.