‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
விக்ரமுக்கு ஜோடியாக ‛தங்கலான்' படத்தில் நடித்த மாளவிகா மோகனன், தற்போது கார்த்தியுடன் ‛சர்தார் -2' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் ‛தி ராஜா சாப்' என்ற படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபாஸ் உடன் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறுகையில், ‛‛தி ராஜா சாப் படம் திகில் கலந்த நகைச்சுவை கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸின் காதலியாக நான் நடிக்கிறேன். இப்படத்தில் நடிப்பதற்கு முன்பு பிரபாஸ் அளித்த பேட்டிகளை பார்த்துவிட்டு அவர் மிகவும் அமைதியான நபராக இருப்பார் என்றுதான் நான் கணித்தேன். ஆனால் அவரை நேரில் பார்த்தபோது முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார்.
எப்பொழுதுமே கலகலப்பாக பேசுகிறார். அவருடன் இருக்கும் நேரங்களில் ரொம்ப ஜாலியாக இருந்தது. அவர் இருக்கும் இடத்தில் எப்போதுமே சிரிப்பொலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அளவுக்கு தான் மட்டுமின்றி மற்றவர்களையும் மகிழ்ச்சி படுத்துகிறார் பிரபாஸ். அவருடன் நடித்தது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக அமைந்திருக்கிறது'' என்று கூறுகிறார் மாளவிகா மோகன்.
மேலும் இந்த ராஜா சாப் படம் கடந்த மூன்று ஆண்டுகளாக தயாரிப்பில் இருக்கும் நிலையில், இன்னும் இரண்டு வாரங்களில் இப்படத்தின் டீசர் வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.