ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! |

சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் படங்கள், ஹிட்டான படங்கள் ரீ ரிலீஸ் ஆகின்றன. அந்த படங்கள் வெளியாகும் போது அந்த படம் குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஆனால் அதில் சம்பந்தப்பட்ட படக்குழுவினர், ஹீரோ, ஹீரோயின்கள் அதிக ஆர்வம் காண்பிப்பதில்லை என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'சச்சின், குஷி' படங்கள் குறித்து அதில் நடித்த விஜய் பேசவில்லை. ஒரு டுவிட் கூட போடவில்லை. ஏன் அந்த படத்தை பார்க்க கூட இல்லை என தகவல்.
இப்போது சூர்யாவின் 'அஞ்சான்' ரீ ரிலீஸ் ஆகிறது. ஆனால் சூர்யா படம் பார்க்கவில்லை. அவர் ஊட்டியில் படப்பிடிப்பில் இருக்கிறார் என தகவல். ஹீரோயின் சமந்தாவும் அஞ்சான் ரீ ரிலீஸ் குறித்து எதுவும் பேசவில்லை. கடந்த வாரம் 'ப்ரண்ட்ஸ்' ரீ ரிலீஸ் ஆன நிலையில் ரமேஷ் கண்ணா தவிர யாரும் படம் பற்றி பேசவில்லை. தங்கள் படம் இத்தனை ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் ஆனாலும் சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் உற்சாகம், ஆர்வம் இன்றி இருப்பதாக கூறுகின்றனர். ரீ ரிலீசால் தங்களுக்கு எந்த பலனும் இல்லை என்று அவர்கள் நினைப்பதால் கப்சிப் என்கின்றனர்.