ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

2013ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற படம் 'தீக்குளிக்கும் பச்சை மரம்'. மருத்துமனை பிணவறையில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கை பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது. இதனை எம்.வினீஸ் இயக்கி இருந்தார். மது அம்பாட் ஒளிப்பதிவு செய்திருந்தார். பிரஜன், சரபு நடித்திருந்தார்கள்.
11 வருடங்களுக்கு பிறகு வினீசும், மது அம்பாட்டும் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'ஜோரா கைய தட்டுங்க'. இதனை வாமா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜாஹிர் அலி தயாரித்துள்ளார். யோகி பாபு கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் ஹரீஷ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ஶ்ரீதர் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.என்.அருணகிரி இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி வினீஷ் கூறும்போது, “இது முழுக்க முழுக்க ஜாலியான படம். யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் . படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார்” என்றார்.