சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி |
‛இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன். அதைத் தொடர்ந்து பல படங்களை இயக்கிய அவர், கடைசியாக 2021ம் ஆண்டு வெளிவந்த ‛கசடதபற' திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து யோகி பாபு நடிப்பில் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் 'போட்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்திய சுதந்திரம் வாங்குவதற்கு 80 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் போட் மேனாக யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ் பாஸ்கர், கவுரி கிஷன், சின்னி ஜெயந்த், மதுமிதா ஆகியோரும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 2ல் படம் வெளியாகிறது.
இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர். அவ்விழாவில் யோகி பாபு 3 மணி நேரம் தாமதமாக வந்து கலந்துக் கொண்டார். அவர் நேர தாமதம் ஆனதுக்கு அனைவரிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார். குற்றாலத்தில் மற்றொரு படப்பிடிப்பில் இருந்ததால் அங்கிருந்து வர தாமதம் ஆனது என்றார்.
ஆனாலும் செய்தியாளர் ஒருவர், தாமதமாக வந்தது பற்றியே விடாமல் கேள்வி கேட்டார். இதனால் சற்று கடுப்பான யோகிபாபு அவரைப் பார்த்து, ‛மைக் ஆப் பண்ணிட்டு வெளியே வா சொல்றேன்' என சொடக்குப் போட்டு சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.