கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
ஜப்பான் நாட்டில் வாழும் தமிழர்கள் இணைந்து ஆண்டுதோறும் ஒசாகா சர்வதே தமிழ் திரைப்பட விழாவை நடத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் 2022ம் ஆண்டு வெளியான படங்களில் இருந்து விருது பட்டியலை விழாக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அடுத்து 2023ம் ஆண்டுக்கான பட்டியலையும் வெளியிட்டு அதன்பிறகு விழா குறித்த தவல்களை வெளியிட இருக்கிறார்கள்.
2022ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது 'விக்ரம்' படத்தில் நடித்த கமல்ஹாசனுக்கும், சிறந்த நடிகை விருது 'சாணிக்காயிதம்' படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கும் வழங்கப்படுகிறது. இதுபோல் சிறந்த இயக்குனர் விருது பொன்னியின் செல்வன் படத்திற்காக மணிரத்னத்திற்கும், சிறந்த இசையமைப்பாளர் விருது 'விக்ரம்' படத்திற்காக அனிருத்திற்கும் வழங்கப்படுகிறது.
சிறந்த திரைப்படமாக 'விக்ரம்' தேர்வாகி உள்ளது. சிறந்த வில்லன் விருது 'விக்ரம்' படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த துணை நடிகர் விருதை 'விக்ரம்' படத்தில் நடித்த பஹத் பாசில் பெறுகிறார். சிறந்த துணை நடிகைக்கான விருதை 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த ஐஸ்வர்யாராய் பெறுகிறார்.
இந்த பட்டியலில் பொன்னியின் செல்வனுக்கு 7 விருதுகளும், விக்ரம் படத்திற்கு 8 விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. 'லவ் டுடே' படத்திற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.