இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

1989ம் ஆண்டில் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா இணைந்து நடித்த படம் கரகாட்டக்காரன். இதில் தான் கனகா அறிமுகமானார். இப்படம் ஓராண்டுக்கு மேல் ஓடி மிகப் பெரிய வசூல் சாதனை செய்தது. இந்த படத்திற்கு பிறகு தங்கமான ராசா, சீதா, பெரிய இடத்துப் பிள்ளை, அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, சாமுண்டி என பல படங்களில் நடித்த கனகா கடைசியாக 1998 கே.எஸ்.அதியமான் நடித்த தலைமுறை என்ற படத்தில் நடித்திருந்தார். தனது தாயாரான நடிகை தேவிகாவின் மரணத்திற்கு பிறகு சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை குட்டி பத்மினி கனகாவை தான் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது தனது முதல் பட நாயகனான ராமராஜனை அவரது வீட்டில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் கனகா. அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில், கனகா ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருக்கிறார்.




