மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | இயக்குனர் பாலாவிற்கு விழா | விவாகரத்து அல்லது பிரேக்கப் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் ; ஐஸ்வர்ய லட்சுமி அதிரடி | வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் சொன்ன வைரல் புகைப்படம் | சைப் அலிகான் - நிகிதா தத்தா நடித்த ‛ஜூவல் தீப்' படப்பிடிப்பு நிறைவு | ‛இட்லி கடை' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் 20 வயது தனுஷ் | ரொமான்ஸ் இல்லாத கணவர் ; பிரித்விராஜை கலாய்த்த மனைவி | கடைசி நேரத்தில் சன்னி லியோன் வருகைக்கு தடை போட்ட போலீசார் ; ரசிகர்கள் ஏமாற்றம் | மாலத்தீவில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு சென்ற வேதிகா | போதும் மகளே.. அபர்ணா பாலமுரளியிடம் கையெடுத்து கும்பிட்ட தந்தை |
நீண்ட இடைவெளிக்கு பின் ராமராஜன் நாயகனாக நடித்து திரைக்கு வரும் படம் ‛சாமானியன்'. ராகேஷ் இயக்க, இளையராஜா இசையமைத்துள்ளார். ராமராஜன் உடன் பயணிக்கு வேடங்களில் ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ராமராஜன் அளித்த பேட்டி : ‛‛எல்லோருக்குள்ளும் இருக்கும் ஒரு கதை. சாதாரணமான ஒருத்தன் கோபப்பட்டால் என்னவாகும் என்பதால் இந்த தலைப்பு வைத்துள்ளோம். இதுவரை நான் நடித்திராத ஒரு கேரக்டர். படத்தில் எனக்கு ஜோடி கிடையாது. ராதாரவி, எம்எஸ் பாஸ்கர் தான் எனக்கு ஜோடி. இந்த கதைக்கு ஜோடியே தேவைப்படவில்லை. இந்த படத்தில் வரும் இடைவேளை மாதிரி வேறு எந்த படத்திலும் இதுவரை வந்தது இல்லை என்று சொல்லலாம். படத்தின் கதை என் காலகட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், அதே சமயம் இந்த கால கட்டத்துக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும்.
விபத்திற்கு பின் நான் உயிர் பிழைத்து வந்ததே ஆச்சர்யம் தான். இடையில் சினிமாவில் நடிக்காதது ஏன் என கேட்கிறார்கள். நான் சினிமாவை விட்டு ஒதுங்கவில்லை. என்னை அவர்கள் கூப்பிடவில்லை. இன்றைக்கு உள்ள சூழலுக்கு ஏற்றபடி இந்த கதை வந்ததால் இதில் நடித்தேன். கரகாட்டக்காரன் 2 வருமா என கேட்கிறார்கள். கங்கை அமரன் கூட கேட்டார். வேண்டாம் அண்ணே, அதில் ஆடியாச்சு, ஓடியாச்சு, முடிஞ்சு போச்சு அது சரியாக வராது என்று சொல்லிவிட்டேன். இப்படத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன். இரண்டு கதை எனக்கு பிடித்து இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த அறிவிப்பு வெளிவரும்'' என்றார்.