ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. புஷ்பா படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவர்களில் படத்தின் எடிட்டர் ஆண்டனி ரூபனும் ஒருவர். இந்த நிலையில் இந்த இறுதி கட்டத்தில் புஷ்பா 2வில் இருந்து ஆண்டனி ரூபன் தற்போது விலகி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி எடிட்டர்களில் ஒருவராக பல படங்களுக்கு பட தொகுப்பு செய்து வரும் ஆண்டனி ரூபன் ஏற்கனவே இங்கே ஒப்புக்கொண்ட படங்களில் பிசியாக பணியாற்றி வருவதால் புஷ்பா 2 படத்திற்கு தன்னால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை என்று கூறி இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தை வெளியே பகிரங்கப்படுத்த விரும்பாத புஷ்பா 2 படக்குழு அவருக்கு பதிலாக குண்டூர் காரம். வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றிய நவீன் நூலியை வைத்து புஷ்பா 2 படத்தின் பணிகளை தொடர இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.