மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு | பிளாஷ்பேக் : ஏவிஎம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி | பிளாஷ்பேக் : சிவனாக நடித்த எம்ஜிஆர் | 'பிரேமலு' மாதிரி 2கே லவ் ஸ்டோரி இருக்கும் : சுசீந்திரன் |
பான் இந்தியா, ஓடிடி…. கடந்த இரண்டு வருடங்களாக நாம் அடிக்கடிப் பார்க்கும், பேசும் வார்த்தைகள். கடந்த இரண்டு வருடங்களில் சில முன்னணி நடிகர்களின், இயக்குனர்களின் படங்கள் '5 மொழிகளில், பான் இந்தியா வெளியீடு' என்று பரபரப்பாகப் பேச வைக்க முயற்சிக்கிறார்கள். தியேட்டர்களில் மட்டுமல்ல ஓடிடியிலும் ஒரே சமயத்தில் 200 நாடுகளில் வெளியீடு என விளம்பரப்படுத்துகிறார்கள்.
அப்படி வரும் படங்களில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களைக் கவர்ந்து பல கோடிகளை வசூலிக்கிறது. கடந்த பத்து மாத காலத்திற்குள் மற்ற மொழிகளில் தயாராகி தமிழில் டப்பிங் ஆகி வெளியான படங்களில் 'புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' ஆகிய படங்கள் தமிழிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று லாபகரமான படமாக அமைந்தது. ஆனால், அப்படி வெளியான வேறு சில படங்கள் இங்கு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தி வசூலைத் தரத் தவறிவிட்டன.
குறிப்பாக பிரபாஸ் நடித்து தெலுங்கில் தயாராகி இங்கு டப்பிங் ஆகி வெளிவந்த 'ராதே ஷ்யாம்', அமீர்கான் நடித்து ஹிந்தியில் தயாராகி இங்கு டப்பிங் ஆகி வெளிவந்த 'லால் சிங் சத்தா', சுதீப் நடித்து கன்னடத்தில் தயாராகி இங்கு வெளிவந்த 'விக்ராந்த் ரோணா' படங்கள் இங்கு தோல்வியைத் தழுவின.
அடுத்து விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் பூரி ஜெகன்னாத் இயக்கியுள்ள 'லைகர்' படம் நாளை(ஆக.,25) பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. தமிழகத்தில் மட்டும் 400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாக உள்ளது. விஜய் தேவரகொண்டாவுக்கு இங்கும் ரசிகர்கள் உண்டு. அவர்களைக் கவர்ந்து 'லைகர்' ரசிகர்களின் லைக்குகளைப் பெறுமா என்பது நாளை தெரிந்துவிடும்.