சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் இணைந்து தெலுங்கில் நடித்து வரும் படம் குஷி. மகாநடி படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தை பிரபல இயக்குனர் சிவா நிர்வான என்பவர் இயக்கி வருகிறார்.
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற ஹிருதயம் படத்திற்கு இசையமைத்த ஹேசம் அப்துல் வகாப் என்பவர்தான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் காஷ்மீர் பகுதிகளில் துவங்கி நடைபெற்று வந்தது. இந்த வருட கிறிஸ்துமஸ் ரிலீசாக இந்தப் படம் வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்னும் மூன்று மாதங்கள் தள்ளிப்போகும் என்கிற தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் விஜய்தேவரகொண்டா. இதுபற்றி அவர் கூறும்போது, சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி 2023 பிப்ரவரி மாதம் தள்ளிப்போகும் சூழல் உருவாகியுள்ளது என்று மட்டும் கூறியுள்ளார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தா சமீபகாலமாக தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவரது சிகிச்சை மற்றும் ஓய்வு காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.