கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை | தமிழ் சினிமாவில் குறைந்து வரும் காமெடி…, ரைட்டர்கள் இல்லையா? | 3வது வாரத்திலும் முன்னேறும் 'டூரிஸ்ட் பேமிலி', பின்வாங்கும் 'ரெட்ரோ' | தக் லைப் : ஓடிடி, சாட்டிலைட் உரிமை இத்தனை கோடியா ? | ஸ்லிம் ரகசியத்தை கேட்டவர்களுக்கு குஷ்பு கொடுத்த பதில்! | மீண்டும் நடிப்புக்கு திரும்பிய எமி ஜாக்சன்! | ரவி மோகன் - கெனிஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பாடகி சுசித்ரா! | பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத் தலைப்புக்கு சிக்கல்! | நடிகை சிம்ரனுக்கு துணையாக டிவி நடிகை ஆனந்தி |
தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான லைகர் படம் தோல்வியை தழுவியது. தற்போது தற்போது இயக்குனர் சிவா நிர்வனா இயக்கத்தில் குஷி படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதை தொடர்ந்து தனது 12வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஜெர்ஸி படத்தின் இயக்குனர் கவுதம் தின்னூரி இயக்குகிறார். கதாநாயகியாக ஸ்ரீ லீலா நடிக்கிறார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். இந்நிலையில் இன்று இந்த படத்தை பூஜையுடன் துவங்கியுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என தெரிவித்துள்ளனர்.