ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒவ்வொரு துறை சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கும், அவர்களுக்கு தேவைப்படும் பல்வேறு விதமான உதவிகளை விஷ்ணு விஷால் தொடர்ந்து செய்து வருகிறார்.
தற்போது தடகள போட்டிகளில் சாதிக்க துடிக்கும் 11 தடகள வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை அளிக்க இருக்கிறார். அந்த வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட விஷ்ணு விஷால், "விளையாட்டு வீரர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை எப்போதும் செய்வேன் , அதற்கென ஒரு நிரந்தர செயல் திட்டத்தை வகுத்து வருவதாகவும்" தெரிவித்துள்ளார்.