ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்த ஜனநாயகன், சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படங்கள் வருவதாக இருந்தது. தற்பொது ஜனநாயகன் வெளிவராத நிலையில், அந்த இடத்தில் சில சிறுபட்ஜெட் படங்கள் வரலாம் என்று தெரிகிறது.
இந்த நிலையில் 'ராட்ட' என்கிற சிறுபட்ஜெட் படம் ஒன்று பொங்கல் வெளியீடாக வருகிற 14ம் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்.எம்.எஸ். மீடியாஸ் தயாரித்துள்ள இப்படத்தை சக்திவேல் நாகப்பன் இயக்கி, கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகியாக ஹெலன் நடித்துள்ளார்.
சித்தா தர்ஷன், சாப்லின் பாலு, சந்திரன், கிருஷ்ணன், முத்துராஜா, பம்பாய் சுப்ரமணி, கல்பனா, வசந்தி, ஜெயஸ்ரீ, ரத்னா, செல்லம்மா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்துள்ளார், மணி கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குனர் சக்திவேல் நாகப்பன் கூறும்போது, “விசைத்தறி தொழிலை மையமாக கொண்ட ஒரு வாழ்வியல் திரைப்படம் இது. காதலோடு கண்ணியம் கலந்து கர்வத்தோடு எடுத்துள்ளோம். திருமணத்திற்கு முன்பு சேமிப்பு என்ற பழக்கம் இல்லாத இளைஞன், திருமணத்திற்கு பின் அத்தியாவசிய தேவைக்கு கடன் வாங்க வாழ்வில் பல திருப்பங்களை சந்திக்கிறார். கணவனின் சிரமத்தை புரிந்த மனைவியும் அவருடன் கைகோர்க்கிறார். இருவரும் வாழ்வில் வெற்றிபெற்றார்களா? என்பதே கதை.
விசைத்தறி தொழிலாளர்களின் வலி நிறைந்த வாழ்க்கை இந்தப்படம் மூலம் மக்களுக்கு இன்னும் ஆழமாக தெரியவரும்'' என்றார்.




