இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'பொன்னியின் செல்வன் 2'. இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் அமெரிக்காவில் இப்படத்திற்கான முன்பதிவு பட வெளியீட்டிற்கு முன்பே சிறப்பாக இருந்தது. தற்போது அங்கு இப்படத்தின் வசூல் 4 மில்லியன் அமெரிக்கா டாலரைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 32 கோடி.
அமெரிக்காவில் இதுவரை வெளியான தமிழ்ப் படங்களில் 'பொன்னியின் செல்வன் 1' படம் 6.7 மில்லியன் டாலர் வசூல் பெற்று முதலிடத்தில் உள்ளது. '2.0' படம் 5.5 மில்லியன் டாலர், 'கபாலி' படம் 4.5 மில்லியன் டாலர் வசூலைப் பெற்று முதல் 3 இடங்களில் உள்ளது. ரஜினியின் '2.0, கபாலி' படங்களின் வசூலை முறியடித்து 'பொன்னியின் செல்வன் 2' படம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறுமா என்பது இனி வரும நாட்களில் தெரியும்.